search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு திட்டம்"

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா செயல்படுத்திய சத்துணவு திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தாமல் அதனை சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #NutritionCenters #TNGovt
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் செழுமைப் பெற்ற சத்துணவு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தாமல், 25 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூட இந்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இந்த உத்தரவை எதிர்த்து நாளை (27-ந்தேதி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

    25 மாணவர்களுக்கும் குறைவானவை என 8000 மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதனை மூட இந்த அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

    இது இத்திட்டத்தால் பயனடைந்துவரும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும், சமூக முன்னேறத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள மையங்களை மேம்படுத்தி அதில் மாணவர்கள் அதிகம் வருவதை இந்த அரசு அக்கறையோடு முன்னெடுத்திருக்க வேண்டும், அதை விடுத்து மையங்களை மூட நினைப்பது அரசின் கையாலாகாத்தனத்தைத் தான் காட்டுகிறது.


    மூச்சுக்கு மூச்சு அம்மாவின் அரசு என கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவி அம்மாவாலும் முன்னோடி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு, பல மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்திட்ட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தாமல் அதனை சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. அரசின் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #NutritionCenters #TNGovt
    சத்துணவு திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். என்று நூல் வெளியீட்டு விழாவில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.
    சென்னை:

    வண்டலூர் தலைநகர் தமிழ் சங்கத்தில் நடந்த ஐ.ஆறுமுகம் எழுதிய ‘திருமுறை அமிழ்தம்’ நூலை வெளியீட்டு திரைப்பட இயக்குனரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் பேசியதாவது:-

    கடலானது கதிரவனின் வெப்பம் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டு தான் பொங்கும். அது போல் கடலால் சுற்றி வளைக்கப்பட்ட பரந்த உலகில் வாழும் மக்கள் இன்சொற்களுக்கன்றி சுடும் சொற்களைக் கேட்டு மகிழமாட்டார்கள்.

    பசி நினைத்தால் மனிதன் ஒருவனை மிருக மாக்க முடியும். ஒரு மிருகத்தைத் தாலாட்டித் தூங்க வைக்கவும் முடியும். பசிக்காகப் பள்ளிக்கு வந்தவர்கள் பின்பு பதவிகளால் இளைப்பாற் வைத்து மகத்தான மாற்றத்தை சாமானியர்களிடம் ஏற்படுத்தியது சத்துணவுத் திட்டம். இந்த திட்டத்தைப் பிரசவித்தவர் காமராஜர், சீராட்டி வளர்த்தவர் எம்.ஜி.ஆர். இந்த மகத்தான மனிதர்களின் கருணையால் தான் அரை நூற்றாண்டுத்தமிழர்கள் ரத்த சோகையை வென்று சத்துணவில் வாகை சூடினார்கள்.

    தமிழ் உரை நடையின் பிரசவ வடிவத்தை சிலப்பதிகாரத்திலும், கவிதை வடிவின் நீரோட்டத்தை கம்பராமயாணத்திலும் காணலாம். மொட்டாக இருந்த திருக்குறளை மலரவைத்து, மனம் பறப்ப வைத்தது பரிமேலழகரின் உரைநடையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள 1,642 சத்துணவு மையங்களில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு   தரமான சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட சத்துணவுத் திட்ட கண்காணிப்புக்  குழுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

    கூட்டத்தில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு சத்துணவை தொடர்ந்து சுகாதாரமான முறையில் சமைத்து  வழங்கவும், உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்கவும், சத்துணவு  மையங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கவும், குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்கவும், மேலும் முட்டையின்தரம் குறித்த ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 
    இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×